பக்கம்:சிற்றம்பலம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிற்றம்பலம்

களேயெல்லாம் உருக்கிய பாட்டைப் பாடிய அவரோ, கோயிலுக்குப் போகவில்லை. பாட்டை அவர் புகழும் பொருளும் ஈட்டும் கருவியாகவே வைத்திருந்தார்.

ஒரு பக்தர் இறைவனிடம் முறுகிய பக்தியுடையவர். அவர் அந்தக் கச்சேரிக்கு வந்திருந்தார். பாட்டிலே தம்மை மறந்து லயித்துப் போனர். ஆனல் பாட்டு முடிந்த பிறகு அந்தப் பாட்டுக்காரர் இறைவனைத் தரிசிக்கவில்லையே என்ற எண்ணம் அவர் நெஞ்சில் உறுத்திக்கொண்டே இருந்தது.

X. - அந்தப் பக்தர் வேறு ஒரு கோயிலுக்குப் போயிருக் தார். அங்கே யாரோ ஒருவர் இறைவன் சங்கிதானத்தில் பாடிக்கொண்டிருந்தார். பாடினரென்று சொல்லக்கூடாது; பாடுவதாக கினைத்து அவர் கத்திக் கொண்டிருந்தார். ராகம் இழுப்பதைப்போல ஏதோ ஈடுகடுவே இழுத்தார். சங்கீதத்தான் இப்படியென்ருல் அவர் தொண்டையோ அதைவிடப் பிரமாதம். அடிக்கடி தொண்டையில் கரகரப்பு ஏற்படும். கோழை வந்து கட்டும். லொக்குலொக் கென்று இருமுவார். ஆனலும் பாடுவதை விடமாட்டார். சங்கீதம் சாரீரம் என்னும் இரண்டும் இப்படி, அவர் பாடின பாட்டு- அது பாட்டே அல்ல. ஏதோ சம்போ சங்கரா, அப்பனே, கடராஜா என்று காமங்களே அடுக்கிச் சொன்னரேயொழிய அது கவியுமல்ல; கீர்த்தனையுமல்ல. அந்த மனிதரோ தம்முடைய பாட்டை யாராவது கேட் டால் பரிகசிப்பார்களே என்ற காணமே இல்லாமல் கண்ணே மூடியபடியே பாடிக்கொண்டிருந்தார்.

தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர் இந்தப் பாட்டையும் கேட்டார். முன்பு சங்கீத வித்துவான் பாடியதை இப் போது கினைந்து பார்த்தார். அந்தப் பாட்டு எங்கே? இந்த உளறல் எங்கே? ஆலுைம் அவர் பக்தராகையால், கோழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/92&oldid=563235" இலிருந்து மீள்விக்கப்பட்டது