பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கார் மேகத்தை ஒத்திருந்தது. அவள் பேச்சு கிளிப் பேச்சை ஒத்திருந்தது. அவளது நடை அன்ன நடையைப் போல இருந்தது. அப்பேரழகி அடக்கம், அன்பு முதலிய நல்ல இயல்புகளைப் பெற்றிருந்தாள். மாநாய்கன் தன் செல்வ மகளைப் பல கலைகளில் வல்லவளாக்க விரும்பினான். அவன் விருப்பப்படியே கண்ணகி தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைத் தக்க ஆசிரியரிடம் பயின்றாள்; குழல், யாழ் இவற்றைப் பயன்படுத்தக் கற்றாள்: நல்ல இசையுடன் பாடக்கற்றாள்; பெண் களுக்கு உரிய அம்மானை, பந்து, ஊசல் முதலிய விளையாட்டுக்களில் வல்லவள் ஆனாள். கண்ணகி, செல்வச் சீமான் செல்வமகள் ஆதலின், அவர்களுக்குத் தோழியர் பலர் இருந்தனர். அவள் அவர்களிடையில் இன்பமாகப் பொழுது போக்கி, வந்தாள் .

திருமண எண்ணம்

மாநாய்கனும் மாசாத்துவானும் நெருங்கிய உறவினர். அதனால் கோவலனை மாநாய்கன் நன்கு அறிவான்; எனவே, கண்ணகியும் நன்கு, அறிவாள். அங்ங்னமே கண்ணகியைக் கோவலன்: அறிவான். இருவரும் மணப்பருவம் அடைந்த பிறகு ஒருவரை ஒருவர் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும், கண்ணகியின் தோழியர் கோவலன் குண நலன்களைக் கண்ணகியிடத்துப் பலவாறு பாராட்டிப் பேசுதல் வழக்கம். அதனால், கண்ணகியின் உள்ளம் கோவலனைக் கணவனாகப் பெறவேண்டும் என்று நாடியது. அவ்வாறே கோவலனும் கண்ணகியின் பேரழகை-