பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

கண்ணகியைக் கண்டு, “தாயே, வருக” என்று உள்ளே அழைத்துச் சென்று, அரசி முன்னர் நிறுத்தி மீண்டான்.

தன்னை அறிவித்தல்

அரசன் கண்ணகியைக் கனிவுடன் நோக்கி, “அம்மையே, கண்களில் நீர் சொரிய, மிகுந்த துக்கம் உடையவளாய் இங்கு வந்து நிற்கும் நீ யார்?” என்று கேட்டான் உடனே கண்ணகிக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அவள், ஆராய்ச்சி அறிவு அற்ற அரசனே, ஒரு புறாவினுக் காகத் தன் உயிர் கொடுத்த சிபி ம், ஒரு பசுக் கன்றுக்காகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மதுச்சோழனும்:ஆண்ட பூம்புகார் எனது பிறப்பிடம் ஆகும். யான் அப்பகுதியில் புகழ்பெற்ற வணிக அரசனான மாசாத்துவானுக்கு மகனாக விளங்கி, இன்று உன்னால்கொல்லப்பட்ட கோவலன் என்பவனுக்கு மனைவி ஆவேன். என் பெயர் கண்ணகி என்பது.” என்றாள்.

கண்ணகி வழக்குரைத்தல்

மன்னவன் மங்கை உரைத்ததை மன வுருக்கத் தோடு கேட்டு, “அம்மே, கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோல் ஆகாதே. அதுதானே செங்கோல் வேந்தர் செய்யத் தகுவது.” என்றான். உடனே கண்ணகி, “அரசே என் கணவன் கள்வன் அல்லன். அவன் என் கால் சிலம்புகளில் ஒன்றை விற்கவே வந்தான்; அதனை விற்று வரும் பணத்தை வாணிக முதலாகக் கொண்டு வாணிகம் செய்ய வந்தான் ; நீ தீர விசாரியாமல் அவனைக் கொலை செய்யக் கட்டளையிட்டனை இதோ. இருக்கிறது எனது மற்றொரு சிலம்பு. மாணிக்க பரலையுடைய சிலம்பு” என்றாள்.