பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

களுடன் சேரனைக் கண்டு வணங்கி ஆடல்-பாடல்களைப் புரிந்தனர். சேரப்பெருமான் அவர்களுக் குத் தக்கவாறு பரிசில் நல்கி விடை கொடுத்தான்.

சஞ்சயன்

நூற்றுவர் கன்னர் அனுப்பிய சஞ்சயன் என்ற தூதுவர் தலைவன், பல வரிசைகளுடன் வந்துசேர வேந்தனைக் கண்டான் சேர அரசன் அவனுக்குத் தக்க மரியாதை செய்து மகிழ்ந்தான்; தன் படைகள் கலக்கம் இன்றிக் கங்கையைக் கடத்தற்கு ஏற்ற கலங்களைத் தயார் செயது வைக்கும்படி வேண்டி னான். சஞ்சயன் அவ்வாறே செய்வதாக வாக்களித்து அகன்றான்.

உத்தர கோசலத்தில் தங்கல்

பின்னர்ச் சேரன் நீலகிரியை விட்டு புறபபட்டு வடக்கு நோக்கிச் சென்றான்; பல நாடுகளைக் கடந்தான்; இறுதியில் கங்கையின் தென் கரையை அடைந்தான். அங்கு சஞ்சயன் பல கப்பல்களுடன் காத்திருந்தான். படைகள் யாவும் கப்பல்களில் ஏறி அக்கரையை அடைந்தன. சேர பெருமான் உத்தர கோசலத்தை அடைந்து, ஓர் இடத்தில் தன் பரிவாரங்களுடன் தங்கி இருந்தான்.

உத்திர கோசலத்தில் போர்

சேரனது வடநாட்டு யாத்திரையை கேள்வியுற்ற கனக விசயர் என்ற சகோதரர்; தமக்குத் துணையாகச் சிற்றரசர் பலரை சேர்த்துக்கொண்டு உத்தர கோசலத்தில் தங்கியிருந்தனர். அவர்கள்