பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

சூழ் இலங்கை கயவாகு[1] வேந்தன், மாளுவ நாட்டு மன்னர், நூற்றுவர் கன்னர் முதலிய அரசர் பலர் வந்திருந்தனர் முன் சொன்ன பெண்மணிகள் மூவரும் கண்ணகியை வாழ்த்திப் பாடினர்.

பத்தினி வாழ்த்தல்

அப்பொழுது விண்ணில் ஓர் உருவம் தோன் றியது. அது கைகளில் வளையல்களும் கழுத்தில் மாலைகளும் காதுகளில் தோடுகளும் அணிந்திருந் தது. அவ்வுருவம், “தோழிகளே, யான் இம்மலையில் விளையாடல் புரிவேன். என் கணவரைக கொல்வித்த பாண்டியன் குற்றமுடையவன் அல்லன். அவன் தேவேந்திரன் அரண்மனையில் விருந்தினனாக இருக்கிறான். நான் அவன் மகள். எனக்குச் சிறப்புச் செய்த செங்குட்டுவன் வாழ்க!" என்று வாழ்த்தி மறைந்தது,

பிறகு வஞ்சி மகளிரும் தேவந்தி முதலியவரும் கண்ணகித் தெய்வத்தைப் பலவாறு வாழ்த்தினர். பிரதிட்டை விழாச் சிறப்பாக நடைபெற்றது. மாளுவ மன்னரும் கயவாகு வேந்தனும் பிறரும், “அம்மே, நீ சேர நாட்டில் எழுந்தருளி இருப்பதைப் போலவே எங்கள் நாடுகளிலும் எழுந்தருளி இருந்து எங்களை வாழ்விக்க வேண்டும்” என்று பத்தினிக் கடவுளை வேண்டினர். அப்பொழுது “தந்தேன் வரம்” என்று ஒரு குரல் விண்ணிடை எழுந்தது.


  1. இவன் கஜபாஹூ என்பவை ‘இவன் காலம் கி. பி. 171-193, இக்குறிப்பினாற்றான் சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது.