பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்சூழ்வரிக் காதையில்

88


என்றும் ஆரவாரம் என்றும் பொருள் கூறப்படுகிறது. கூக்குரல் என்றும் கூறலாம். அது சாதாரணமாகக் கூறப்படும் பொருளாகும். ஆனால் அந்தச் சொல் கூறப்பட்டுள்ள சூழலைக் காணும் போது ஆத்திரம் பொங்கி எழுந்து உள்ளக்குமுரலை வெளிப்படுத்தும் மக்கள் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். “கண்ணீரும் கம்பலையும்” என்னும் சொல் ஆழ்ந்த தாங்க முடியாத துக்கத்தின் வெளிப்பாடாக இவ்வாறு கூறப்படுவதை இலக்கியங்களில் காண்கிறோம்.

இந்தக்காட்சியோடு, மற்றொரு காட்சியை இங்கு ஒப்பிடுவது தக்கதாக இருக்கும்.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் “சூதில் பணயமாகக் கிடைத்த பாஞ்சாலியை, துரியோதனுடைய ஆணையின் பேரில் அவன் தம்பி துச்சாதனன் அத்தினாபுரத்து வீதி வழியே இழுத்துச் செல்கிறான். “ஐயோ” என்று பாஞ்சாலி கதறுகிறாள். அதை அந்த நகரத்து மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இந்தக் காட்சியை மகாகவி பாரதி கூறுகிறார்.

ஆடி விலைப்பட்டதாதி நீ - உன்னை
ஆள்பவன் அண்ணன் சுயோதனன் - மன்னர்
கூடியிருக்கும் சபைதனிலே - உன்னைக்
கூட்டி வருக என்று மன்னவன் - சொல்ல
ஓடிவந்தேன் இது செய்தி காண்
துச்சாதனன் இதனைச் சொல்லினான்,
பாஞ்சாலி
“அச்சாகேள், மாதவிலக் காதலால் ஓராடை
தன்னிலிருக்கின்றேன், தார் வேந்தர் பொற்சபை முன்
என்னையழைத்தல் இயல்பில்லை அன்றியுமே
சோதரர் தம் தேவி தனைச் சூதில் - வசமாக்கி
ஆதரவு நீக்கியருமை குலைத்திடுதல்
மன்னர் குலத்து மரபோ காண்? அண்ணன் பால்
என்னிலைமை கூறிடுவாய், ஏகுக நீ” என்றிட்டாள்

கக்கக்கவென்று கனைத்தே பெருமூடன்