பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்சூழ்வரிக் காதையில்

92


"தெய்வமும் உண்டுகொல், தெய்வமும் உண்டு கொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டு கொல், தெய்வமும் உண்டு கொல்

என் கணவனைக் கூரிய வாளால் கொடுமையாக வெட்டிக் கொன்ற, கோல் வளைந்த, நீதி தவறிய மன்னவனின் கூடல் நகரில் தெய்வம் இருக்கிறதா என்று மதுரை மக்களைக் கேட்கிறாள்.

அத்துடன் கண்ணகி நிற்கவில்லை. “உயிர் நீங்கிய கணவருடன் நானும் உடன் சென்றிருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யமாட்டேன். எனது சினம் தணிவதற்குக் கொடிய பாண்டிய மன்னனைக் கண்டு இக்கொலைத் திறத்திற்குரிய காரணம் யாதெனக் கேட்பேன்" என்று மதுரை மக்களிடம் கூறுகிறாள்.

"காய்சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்,

தீவேந்தன் தனைக் கண்டித்திறங்கேட் பல்யானென்றாள்.

என்று கூறியெழுத்தாள்.

"நின்றாள், நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள், நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்தடையாச்

சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில் முன்,

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

பொங்கி எழுந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு, ஆவேசம் கொண்டு அரசனது கோயில் வாசலுக்குச் சென்றாள்.

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித்தகை சான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்"

என்று வள்ளுவர்கூறும் இலக்கணத்திற் கேற்பத் தனது கணவன் கொல்லப்பட்டபோது. அதைக் கண்டு சோர்வடையாமல்