பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசிரியர் உரை

ஞானிகளும் ஆபூர்வமான அரும்பங்காற்றி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிவோம்.

இளங்கோவடிகள் தனது சீரிய சிலப்பதிகாரக் காப்பியத்தில் அவர் காலத்தில் நாட்டு வழக்கத்தில் இருந்த பல பெரிய கோயில்கள், தெய்வங்கள்,விழாக்கள் பற்றியும், எண்னற்ற பல சிறிய கோயில்கள் தெய்வங்கள், மன்றங்கள், பீடங்கள், தீர்த்தங்கள் பற்றியும், மக்களுடைய வழிபாடுகள், ஆடல்பாடல்கள், கூத்துக்கள், பற்றியும் அவற்றின் மூலம் பல அறிய சமயக்கருத்துக்களையும் மக்களுக்கு வழிகாட்டும் நெறிகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

இறைவனுக்கான பிறவாயாக்கைப் பெரியோன் கோயில் முருகனுக்கான ஆறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில், பல தேவனுக்கான வால்வளை மேனி வலியோன் கோயில், திருமாலுக்கான நீலமேனி நெடியோன் கோயில் இந்திரனுக்கான மாலை வெண்குடை மன்னவன் கோயில் முதலிய பெரிய கோயில்களை இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார். திருவரங்கம் திருவேங்கடம் திருமால்குன்றம் (அழகர் கோயில் திருமாலிருஞ்சோலை) திருவனந்தபுரம் முதலிய பெருமாள் கோயில்களைப் பற்றியும் மற்றும் கொற்றவை கோயில்களைப் பற்றியும் சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்பிடுகிறது.

நாளங்காடிபூதம், காவல் பூதங்கள் பாவை பற்றின் பீடங்கள், வெள்ளிடைமன்றம், இலஞ்சிமன்றம், நிழல்கால் நெடுங்கால் நின்ற மன்றங்கள், பூதச்சதுக்கம், பாவை மன்றம், நால்வகைத் தேவர்களுக்கும் பதினெட்டு கணங்களுக்கும் ஆன சிறு கோயில்கள், அமரர் திருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம், வெள்ளை நாகர் கோட்டம், கிராம தேவதைகளுக்கான ஊர்க்கோட்டங்கள் வேல் கோட்டம் வச்சிரக் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம் (சூரியன் கோயில்), புறம்பாணையான் வாழ்கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், பாசண்டச் சாத்தன் என்றும் ஐயனார் கோயில்கள் சுடுகாட்டுக் கோட்டம் காமவேள் கோட்டம் அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டங்கள் ஐயை (கொற்றவை) கோட்டங்கள் ஏவல் தெய்வம் காவல் தெய்வம் அந்தனர் அரசர் வணிகர் வேளாளார் ஆகியோருக்குரிய நால்வகை பூதங்களுக்கான பீடங்கள் இல்லுறை தெய்வங்களுக்கான பல சிறிய கோயில்கள் அவரவர் குல தெய்வங்களுக்கான சிறுகோயில்கள், முதலியவை பற்றி பல