பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. வஞ்சின மாலைக்காதையில்

பாண்டிய மன்னன் வீழ்ந்தான். அவனுடன் சேர்ந்து கோப்பெரும் தேவியும் நடுங்கி வீழ்ந்தாள். கண்ணகி அத்துடன் நிற்கவில்லை. தனது கோபக்கனலால் மதுரை நகரையே எரிக்கத்துணிந்தாள்.

வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் தன்னுடைய வழக்கைக் கூறச்சென்றபொழுது, நீயாரம்மா என்று பாண்டிய மன்னன் கேட்க, புறாவிற்காகத் தன்னையே ஈய்ந்த நீதி நிறைந்த சிபியும், பசுவுக்கு நியாயம் வழங்கத் தனது மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனும் நீதி காத்த பூம்புகார் நகரமே எனது ஊர் என்றும், கண்ணகி எனது பெயர் என்றும் கூறினாள். சோழ மன்னர் பரம்பரையில் அரச நீதியின் வழுவா ஒழுக்கத்தை எடுத்துக் காட்ட அதை அறம்பிழைத்த பாண்டிய மன்னனுக்குச் சுட்டிக்காட்ட அவ்வாறு கூறினாள் எனக் கொள்ளலாம்.

“தேரா மன்னா செப்புவதுடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற்கடை மணிநடுநா நடுங்க
ஆவின்கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான்தன்
அரும்பெறற்புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப்புகார் என்பதியே....”

என்பது காப்பிய வரிகள்

இங்கு புகார் நகரை ஆண்ட மன்னர்களின் அரச நீதி அனைவருக்கும் பொதுவான எடுத்துக்காட்டாக அமைகிறது.

தென்னவனும் கோப்பெருந்தேவியும் தாங்கள் செய்த அரசியல் பிழையின் அதிர்ச்சியால் மாண்டபின்னரும், மதுரை