பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சின மாலைக்காதையில்

100


திலும் இந்நிகழச்ச்சி திருமருகலில் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

இரண்டாவது, “பொன்னிக் கரையின் மணற்பாவை நின் கணவனாம் என்று உரை செய்த மாத ரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற வரியாள் அகலல்குல் மாதர்” என்னும் வரலாற்றையும் கண்ணகி கூறிக்காட்டுகிறாள்.

மூன்றாவது “உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல் கொள்ளத்தாள் புனலின் பின் சென்று கன்னவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீ இக்கொண்டு பொன்னங் கொடி போலப் போதந்தாள்” என்னும் பெருமைமிக்க சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் மகள் ஆதி மந்தியின் கற்பின் சிறப்பை எடுத்துக்காட்டி கண்ணகி பேசுகிறாள்.

நான்காவதாக “மன்னி மணல் மலி பூங்கானல் வருங்கலன்கள் நோக்கிக் கணவன் வரக்கல்லுருவம் நீத்தாள்” என்னும் கற்புடைப் பெண்டிரின் பெருமையை எடுத்துக் கூறுகிறாள்.

ஐந்தாவதாக “இணையாய மாற்றாள் குழவி விழத்தங்குழவியுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்னாள்” என்னும் கதையையும்,

ஆறாவதாக “வேற்றொருவன் நீள் நோக்கங்கண்டு, நிறைமதி வாள் முகத்தைத் தானோர் குரங்கு முகமாகென்று போன கொழு நன்வரவே குரங்கு முகம் நீத்த பழுமணி அல்குல் பூம்பாவை” என்னும் சிறப்பு மிக்க கதையையும்,

ஏழாவதாக,

“விழுமிய, பெண்ணறி வென்பது, பேதமைத்தே என்றுரைத்த