பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழற் படுகாதையில்

104


என்று தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றுவிட்டன என்பது காப்பியம் கூறும் செய்தி யாகும்.

நால்வகை பூதங்கள் என்பது நால்வகை வருண பூதங்கள் என்றும் அவை ஆதிபுதம் அல்லது அந்தண பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண்பூதம் என்றும் சில உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நால்வகை வர்ணக் குறிப்புக்கு,

“குணத்திற்கும் செய்கைக்கும் தக்கபடி
நான் நான்குவர்ணங்களை சமைத்தேன்
செய்கையற்றவனும், அழிவற்றவனுமா
கிய யானே அவற்றைச் செய்தேன் என்

று உணர்” (4-13) என்றும்


“பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்
திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவ
ரின் இயல்பில் விளையும் குணங்களின் படி

வகுப்புற்றனவாம் (18-41)”

என்றும் கீதா வாக்கியங்கள் குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கனவாகும்.

“நத்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித்
முத்தீவாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்விக்கருவியோடு

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்”

என்னும் சிலப்பதிகார வரிகளுக்கு “பசுமையான முத்து வட மணிந்த நிலவு போல் விளங்கும் மிக்க ஒளியினையுடைய நான்முகன் யாகத்திற்கென உரைத்த உறுப்புகளோடே முத்தீ வாழ்க்கையின் இயல் புகளினின்றும் பிழையாத தலைமையமைந்த ஆதி பூதமாகிய கடவுளும் என்று உரையாசிரியர் கூறுகிறார். இதில் ஆதி பூதத்து அதிபதிக்கடவுளும் என்பதற்கு