பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. கட்டுரைக் காதையில்

இக்காதையின் தொடக்கத்தில் மதுராபதியின் வடிவத்தை அடிகளார் விளக்குகிறார். உமையொரு பாகத்தின் இறை வடிவமாக அதை நமக்குக் காட்டுகிறார்.

“சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவள வாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச் செவ்வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங்கிருண்ட நீலமாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந்தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றுந்தகை மையள் பனித்துறைக்
கொற்கைக் கொண்கன் குமரித்துறைவன்
பொற்கோட்டுவரம்பன் பொதியிற் பொருப்பன்

குல முதற் கிழத்தி.......”

என்பது இளங்கோவடிகள் குறிப்பிடுவதாகும்.

சடையையும் அதனிடத்தே தங்கயிளம் பிறையையும் உடைய தலையினையையும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய, வெண்ணிறமான ஒளிபொருந்திய திருமுகத்தையும் உடையவளும், கடை வாயின் கண் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற எயிற்றினையுடைய பவளம் போன்று சிவந்த வாயையுடையவளும், அவ்வாயினிடத்தே நிலாவொளி விரிந்து திகழுகின்ற முத்துக் கோர்வை போன்ற பல்வரிசையினையுடையவளும், தனது இடப்பாகம் இருண்ட நீலமணி போன்ற நிறமுடைய திருப்பினும், வலப் பாகம் பொன்னினது நிறத்தையொக்கும் நிறமுடைய திருமேனியை உடையவளும், தனது இடக்கையின் கண் அழகிய ஒளியையுடைய மழுவை ஏந்தியவளும் தனது வலக் காலிடத்தே அழகிய