பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

113


அலந்தனள், ஏங்கி அழுதனள் நிலத்தில்
புலந்தனள், புரண்டனள், பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயைகோயில்
செய்வினைக் கதவம் திறவாதாகலின்
திறவாதடைத்த திண்ணிடலைக்கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்
“கொடுங்கோல் உண்டு கொல் கொற்றவைக்குற்ற
இடும்பையாவதும் அறிந்தீ மின்னென,
ஏவல் இளையவர் காவலர் தொழுது
வார்த்தி கற்கொணர்ந்த வாய்மொழியுனரப்ப
நீர்த்தன்றிது வென நெடு மொழி கூறி
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொருத்தல் நுங்கடனெனத்
தடம் புணற்கழனித்தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகைக் கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைகக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையும் சிறிது தணிந்தனனே
நிலைகெழுகூடல் நீள்நெடுமறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்பக்

கலையமர் செல்வி கதவம் திறந்தது”

என்று காப்பிய வரிகள் விவரிக்கின்றன.

இந்தக் கதைப்பகுதியில் சில அறநெறிகள். அரச நீதிமுறை முதலியன பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன.

உறுபொருளுமுல்கு பொருளுந்தன்னொன்னார்த்
தெறு பொருளும் வேந்தன் பொருள்”

என்பது திருக்குறள் கருத்தாகும். இடுபொருளும் படுபொருளும் வேந்தர்க்குரியது என்பது அன்றய அரசியல் நீதியாகும். இன்றும் கூட புதையல் பொருள் அரசுக்கே உரியதாகும்.