பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. குன்றக்குரவைக் காதையில்

மலைப்பகுதிகளில் வாழும் குரவர் பெருமக்கள் தங்கள் வழிபடு கடவுளாகிய முருகக் கடவுளைப்பாடி ஆடும் கூத்து குன்றக் குரவை என்று கூறப்படுகிறது.

வேங்கை மரத்தின் கீழ் அமர்ந்திருந்த கண்ணகியைப் பார்த்து எங்களது வள்ளியைப் போல இருக்கின்றீர், முலையிழந்து வந்து நிற்கின்றீர். நீவர் யார் என அம்மலை வாழ் மக்கள் கேட்கிறார்கள்.

"மலை வேங்கை நறுநிழலின்
வள்ளிபோல் வீர்மன நடுங்க
முலை இழந்து வந்து நின்றீர்

யாவிரோவென முனியாத"

என்று கேட்கிறார்கள். கண்ணகி தனது வரலாற்றைக் கூற அவளைக் கண்டு அஞ்சி கை கூப்பி நிற்க, தேவர்களும் மிக்க மலர் மழையைச் சொரிந்து மலையில் இருந்த குறவர் பெருமக்களும் கண்ணாற் கண்டு நிற்கும் வண்ணம் அவள் கணவனுடன் அழைத்துப் போயினர், ஆதலின் நம் குலத்திற்கு இவளைப் போன்ற ஒரு பெரிய தெய்வம் இல்லையெனக்கூறி இப்பத்தினித் தெய்வத்தை வேங்கை மரத்தடியில் வைத்து வழிபடுவோம் என்று கூறி பாடுகின்றனர்.

"சிறுகுடியீரே, சிறுகுடியீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே, என்று
பறைதனை அடித்தும் கொம்புகளை ஊதியும்
மணிகளை ஒலிக்கச் செய்தும் குறிஞ்சிப்பண்
ணினைப் பாடுகிறார்கள், அகிற்புகை யேந்தி
மலர் தூவி சுற்றுச்சுவர் எழுப்பி வாயில்

அமைத்து வழிபடுகிறார்கள்"

என்று இளங்கேவாடிகள் குறிப்பிடுகிறார்கள்.