பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

127


யெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் வடிவத்தை உடைய சிவபெருமானின் சேவடிகளை வீரம் பொருந்திய வஞ்சி மாலையுடன் சேர்த்து தன் தலையிலே அணிந்து கொண்டான். பின்னர் யாரையும் வணங்காத செங்குட்டுவன் சிவபெருமான் கோயிலை வலம் வந்து வணங்கினான். அந்தணர்கள் ஆகுதியை ஏந்தி நின்றனர். சேரர் பெருமான் மதக் களிப்பு கொண்ட யானை மீது ஏறி அமர்ந்தான்.

சேர நாட்டு வேந்தனான செங்குட்டுவன் வெற்றி பெருவானாக என திருவனந்தபுரத்து திருக்கோயிலில் பாம்பணை மீது யோக நித்திரையில் அமர்ந்துள்ள திருமாலின் சேடத்தைக் கொண்டுவந்து கொடுத்து சிலர் வாழத்துக் கூறினார். கங்கை நீர் தங்கியுள்ள சடைமுடியையுடைய சிவபெருமானின் திருவடிகளை ஏற்கனவே தலை முடியில் சேரன் வைத்துக் கொண்டிருந்ததால் திருமாலின் சேடத்தினையும் வாங்கி தனது மணிகள் விளங்கும் தோள்களின் மீது தாங்கிக் கொண்டும் மிகுந்த தகுதியுடன் வடதிசை நோக்கிச் சென்றான் என்று அந்தக் காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன. இங்கு கண்ணகிக்குச் சிலை செய்ய கல் எடுக்க இமயத்திற்குப் புறப்பட்ட சேரன் செங்குட்டுவன் சிவபெருமானின் திருமாலின் ஆசியையும் பெற்று தனது பயணத்தைத் தொடங்கினான் என்பதை இளங்கோவடிகள் குறிபிபட்டுக் கூறியுள்ளதைக் காண்கிறோம்.

சேரமன்னன் தனது பெரும் படைகளுடன் ஆரவாரத்தோடு நீலகிரி மலையைக் கடந்து செல்லும்போது

"இயங்கு படை அரவத்தீண்டொலி இசைப்ப
விசும்பியங்கு முனிவர் வியன் நிலம் ஆளும்
இந்திரத்திருவனைக் காண்குதும் என்றே
அந்தரத்திழிந்தாங்கு அரசு விளங்க வையத்து
மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்"