பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்கோட்காதையில்

130


“வையகம் அதனில் மாக்கள் மயங்குவர் வயவெம் சேனை
எய்திடின், என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவப்
பெய்கனி, கிழங்கு, தேன் என்று இணையன பெறுதற்கு ஒத்த

செய்யமால் வரையே, ஆறாச் சென்றது.அத்தகைப்பு இல்சேனை

என்று குறிப்பிடுகிறார்.

“இந்தப் பெரிய சேனை செல்லும் போது உலகத்து மக்களுக்கெல்லாம் சிரமங்கள் ஏற்பட்டுவிடும் எனக்கருதி இராகவனுடைய ஏவலின்படி, காய், கனி கிழங்கு தேன் முதலியவை கிடைக்கும் வகையில், மலைகளின் ஓரமாகவும் ஆற்றங்கரை ஓரமாகவும், அத்தகைப்பு இல்லாத சேனை சென்றது.” என்பது அதன் பொருள்

இளங்கோவடிகள் “வடதிசை மருங்கின் மறை காத்தோம் புனர் தடவுத்தீயவியாத்தண் பெருவாழ்க்கை காற்றுதாளரைப் போற்றிக் காமினென்” என்று நேரடியாகவே குறிப்பிடுகிறார்.