பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. நடுகற்காதையில்

வடபுலம் சென்று வெற்றியுடன் திரும்பிய சேரன் செங்குட்டுவன் தனது கோப்பெரும் தேவியோடு நிலாமுற்றத்தில் அமர்ந்திருந்த போது கூத்தர்கள் வந்து இமையவன் ஆடிய கொடு கொட்டி ஆட்டத்தை ஆடிக்காட்டி அரசனை மகிழ்வித்தனர் என்று சிலப்பதிகாரக் கதை குறிப்பிடுகிறது. இங்கு இறைவன் உமையொரு பாகனாக இருந்து ஆடியதைப் போன்றதொரு ஆடலை அக்கூத்தர் ஆடிக்காட்டினார்கள் என்பதாகும்.

“பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார் குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒரு திறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்

கூத்தச் சாக்கையனாடலில் மகிழந்தவன்”

என்று அந்த அழகிய காப்பிய வரிகள் மிக நுட்பமாகக் குறிப்பிடுகின்றன.

அழகான கால்களிலே கட்டியிருந்த சிலம்புகள் ஒலிக்க, சிவந்த கைகளிலே ஏந்தியிருந்த பறைகள் முழங்க, நீண்டு உருண்டிருந்த கண்கள் தம் கருத்தினை வெளிப்படுத்த செஞ்சடைமுடிகள் பரந்து பல திக்குகளிலும் பறந்து ஆட, பாடகம் அசையாது. தோள்வகைள் குலுங்காமல், மேகலை அணிகள் ஒலியாமல், மென்முலைகள் அசையாமல், நீண்ட குழைக் காதுகளின் அணிந்திருந்த காதணிகள் ஆடாமல், நீண்ட மணிக்குழல்கள் அவிழாமல், இறைவியான அன்னை உமாதேவி தனது இடப்பக்கத்தில் இருக்கமகாதேவனாகிய இமையவன் சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி என்னும் ஆட்டத்தைப் படுத்துணர்வதற்கு அரிதாக உள்ள நால்வகைப்பட்ட வேதங்களை ஓதி உணரும் வேதியர்கள் நிறைந்து வாழும் பறையர் என்னும் ஊரிலிருந்து வந்த கூத்தச்சாக்கையன் என்னும் கலைஞன் சேரன் செங்குட்டுவன் முன்பு ஆடினான். அந்த