பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

134


ஆட்டத்தைக் கண்டு அரசன் தன் தேவியுடன் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

நாட்டிய வடிவில் உள்ள உமையும் சிவனும் ஆடும் ஆட்டத்தின் முறைகளை மிகவும் அழகாக அடிகளார் இங்கு சிறப்பித்துக் கூறுவதைக் காணலாம்.

சேரமன்னன் அரசியல் மண்டபத்தில் அமர்ந்திருந்தான் அப்போது நிலன் முதலிய கஞ்சுகமாக்கள் வந்து, சோழ மன்னனிடத்திலும் பாண்டிய மன்னனிடத்திலும் கனக விஜயர்களைக் கொண்டு சென்ற போது அவர்கள், “போரிலே தோற்று கொல்லாக் கோலம் பூண்டு சென்ற அரசர்களைப் பிடித்து வருதல் பெருமையாகாது” என்று கூறினார்கள் என்று சொன்னார்கள் என்பதை சிலப்பதிகாரக்கதை குறிப்பிடுகிறது. இந்த இடத்திலும் இளங்கோவடிகள் போரில் தோற்ற அந்த வட புலத்தரசர்கள் உமையொரு பாகத்து இறவைனை வணங்கி அமர்க்களம் நீங்க தவப்பெருங்கோலம் - கொல்லாக்கோலம் கொண்டவர்களை இங்கு பிடித்துக்கொண்டு வருவது பெருமையாகாது என்று குறிப்பிட்டுக் கூறுகிறார். இதில் உமையொரு பாகத்து இறைவனை வழிபடுதலும், கொல்லாமைக் கருத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

“ஆரிய மன்னர் அமர்க்களத்தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்பு நனிசிறந்த
சயந்தன் வடிவில் தலைக் கோலாங்குக்
கயந்தலை யானையிற் கவி கையிற் காட்டி இமையச்சிமையத்திருங்குயிலாலுவத்து
உமை யோரு பாகத்து ஒருவனை வணங்கி
அமர்க்களம் அரசனதாகத் துறந்து
தவப் பெருங் கோலங் கொண்ட டோர்தம் மேல்
கோதியழற் சிற்றம் கொண்டோன் கொற்றம்.
புதுவ தென்றனன் போர் வேற்செழிய னென்று
ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீண்மொழி யெல்லாம் நீலன் கூற”

என்பது காப்பிய வரிகளாகும்.