பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

139


வேண்டும் என்று மாடல மறையோன் கூறுவதை ஒரு சிறந்த வழிகாட்டுதலாக, சிலப்பதிகாரக்காப்பியம் எடுத்துக் கூறுகிறது.

"திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே
நரை முதிர்யாக்கை நீயும் கண்டனை
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினும் காணும்
ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒரு வழிக்
கூடிய கோலத் தொருங்கு நின்றியலாது,
செய்வினை வழித்தாய் உயிர் செலுமென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரையாதலின்
எழுமுடிமார்ப, நீயேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள்வேந்தே
அரும்பொருள் பரிசிலன் அல்லேன் யானும்
பெருப்பேரி யாக்கை பெற்ற நல்லலுயிர்
மலர்தலையுலகத்துயிர் போகு பொது நெறி

புலவரையிறந்த தோய் போதுதல் பொறே என்"

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

செய்வினையின் வழியில் உயிர் செல்லும் என்பது பொது நெறி அதனின்றும் மேலெழுந்து சிறப்பு நெறியில் செல்லுமாறு நாம்அதற்குரிய நல்ல பல அறிய செய்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கு குறிப்பாக உள்ள கருத்தாகும்.

சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தில் மாடல மறையோன் ஒரு தலை சிறந்த பாத்திரப் படைப்பாகும். வழிவழியாக வரும் சிறந்த ஞானிகளின் வரிசையில் வரும் ஒரு பேரறிஞனாக மாடலனைக் காண்கிறோம். அவனது அறிவுரைகள், அவர் கூறும் செய்திகள் சிறந்த இலக்கியமாக அமைந்துள்ளது. ஊழின்