பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

140


பெருவலி பற்றி அளவுக்கும் அதிகமாக வலியுறுத்தப்பட்டு மக்கள் மயங்கிக் கிடந்த காலத்தில் அதை மீறி, அநியாயங்களைக் கண்டிக்கவும். பொது நெறியைத் தாண்டி, ஒரு சாதாரண நிலையிலிருந்து மேலெழுந்து சிறப்பு நெறியில் செல்ல முனையவேண்டும் என்னும் உயரிய கருத்தை இளங்கோவடிகள் தனது சிறந்த சில பாத்திரப்படைப்புகள் மூலம் நமக்கு எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.

கம்பனும் தனது மகா காவியத்தில், இராமனே கூட, தான் வனம் செல்ல வேண்டிய தேற்பட்டது பற்றியும், தந்தை இறந்தது பற்றியும், சீதையை அரக்கன் கவர்ந்து சென்றது பற்றியும் வருந்தி விதியின் வலிமையைக் கூறி தான் உயிர் வாழ்ந்தும் பயனில்லை. நான் என் செய்வேன் என்று மனம் நொந்து சோர்வடைந்தான், என்று குறிப்பிடுகின்றார்.

"அறம் தலை நின்றிலாத அரக்கனின்
ஆண்மை தீர்ந்தேன்
துறந்தனென் தவம் செய்கேனோ?
துறப்பனோ உயிரைச் சொல்லாய்
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால்
பெற்ற தாதை
இறந்தனன், இருந்துளேன்யான்

என் செய்கேன் இளவன் என்றான்.

என்று இராமன் புலம்புகிறான். அதைக் கேட்ட இலக்குவன் நடந்ததை நினைத்துப் பலன் இல்லை. விதியால் விழைந்தது இந்தத் துன்பங்களேல்லாம். அதை நினைத்துப் பயனில்லை. இனி நாம் அந்த அரக்கரைக் கொன்ற பின்தான் நமது கொடுந்துயர் தீரும் என்று இராமனைத் தேற்றுகிறான்.

"என்றலும் இளையவீரன் இறைவனை இறைஞ்சி யாண்டும்
வென்றியாய்! விதியின் தன்மை பழுதில விளைந்தது அன்றோ
நின்றுஇனி நினைவது என்னே? நெருங்கி

அவ்வரக்கர் தம்மைக்