பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

142



இது வென வளர்ந்து வாழு நாளுணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதுமில்லை.
வேள்விக் கிழத்தியிவ ளொடுங் கூடித்
தாழ்கடல் மன்னர் நின்னடிபோற்ற
ஊழியோடூழி யுலகங்காத்து
நீடுவாழியரோ நெடுந்தகை யென்று
மறையோன் மறைநாவுழுது வான் பொருள்

இறையோன் செவி செறுவாக வித்தலின்"

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

மாடல மறையோன் சொல்லிய முறைகளின்படி அரசனும் வேள்விக்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். அதற்கவசியமான அந்தணர்களை வரவழைத்தான். வேள்விப் பொருள்களைக் கொண்டு வரச் செய்தான். சிறையில் இருந்த ஆரிய அரசர்களை விடுவிக்கச் செய்தான். அவர்களைத் தனி மாளிகையில் இருக்கச் செய்து வேள்வி முடிந்த பின்னர் அவர்களை அவரவர் ஊர்களுக்கு நாடுகளுக்குச் செல்ல உத்தரவிட்டான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தனது அமைச்சர்களில் முதல்வனான வில்லவன் கோதையிடம் கூறினான்.

"வித்திய பெரும்பதம் விளைந்து பதமிகுத்துத்
துய்த்தல் வேட்கையில் சூழ்கழல்வேந்தன்
நான்மறை மரபின் நயந் தெரிநாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி
ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப்
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித்தண்மலர்ப் பூம்பொழில்
வேளாவிக்கோ மாளிகை காட்டி
நன் பெருவேள்வி முடித்ததற் பின்னாள்
தம் பெருநெடுநகர்ச் சார்வதும் சொல்லியம்
மன்னவர்க் கேற்பன செய்க நீயென

வில்லவன் கோதையை விருப்புடன் ஏவி

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.