பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

4


ஆயினும் பிரம்மாவுக்குக் கோவில் அரசமரத்தடியில் பிள்ளையார் கோவிலாக ஊர்தோறும் ஏற்பட்டிருக்கிறது என்றும் வேதத்தில் பிரம்ம தேவனையே கணபதி என்று ரிஷிகள் வணங்கினர். அவரே ப்ரஹ்மனஸ்பதி அவரே பிரஹஸ்பதி என்றும், விநாயகர் பிரணவ மந்திரத்தைக் காட்டுவது, அறிவின் குறி கண நாம்த்வா கணபதிம் வா வா மஹே என்று சமான்ய வழக்கத்தில் உள்ள வேத மந்திரத்தில் பிள்ளையாரைப் பிரம்ம தேவனென்று காட்டியிருப்பது தெரிந்து கொள்ளுக என்று பாரதியார் தனது கட்டுரைத் தொகுதியில் குறி ப்பிட்ருப்பதைக் காண்கிறோம்.

இந்த நிலையில் திருமால் வழிபாடும் சிவன் வழிபாடும், சக்தி வழிபாடும், முருகன் வழிபாடும் இன்று மக்களிடையில் மிகவும் பிரபலமடைந்து நிலைபெற்று இருக்கிறது. இந்த தெய்வங்களுக்கான பெரிய கோயில்களையும் நாம் காண்கிறோம். ஆயினும் பாரத நாடு முழுவதிலும் சிவன், விஷ்ணுவிற்கான கோயில்கள் தான் பெரிய கோயில்களாக விளங்குகின்றன. முருகனுக்கான பெரிய கோயில்கள் பெரிதும் தமிழகத்தில் மட்டுமே இருக்கின்றன. சிவன் கோயில்களிலும் இந்திய நாட்டில் மிகவும் பிரபலமான மதுரை, காஞ்சி, காசி கோயில்களில் முறையே மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி ஆகிய சக்தி தெய்வங்களே முக்கியமாக முதலிடம் பெற்று மக்களிடம் பிரபலம் அடைந்திருக்கின்றன.

நாட்டு மக்களுடைய இத்தகைய பல்வேறு முறையான வழிபாட்டு முறைகளை இளங்கோவடிகளார் தனது காப்பியத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளதைக் காண்கிறோம்.

இந்து சமயம் என்று இன்று கூறப்படுவதை இந்து தர்மம் அல்லது பாரத தர்மம் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். தர்மம் என்பது விரிவான பொருளைக் கொண்டது. அதைத் தமிழில் அறம், கடமை என்று குறிப்பிடலாம். இந்து சமயம் என்பது ஒரு வாழ்க்கை முறையேயாகும். அதனால் அதைத் தர்மம் எனக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமேயாகும்.