பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

15


பழுதில் விழுந்ததன்றோ” என்று இலக்குவன் கூறுவதையும் கம்பன் காட்டுகிறார்.

விதியின் வலியால், ஊழ்வினையின் வலியால் தீமைகள் விளையும் போது அத்தீமைகளை எதிர்த்து விதியை மதியாலும் உடலாற்றல் வலுவாலும் அறிவாற்றல் திறனாலும் வென்றும் தீர்வு கண்டும் மக்களுக்கு நமது கதைகளும் காவியங்களும் காப்பியங்களும் நம்பிக்கையூட்டுகின்றன.

முன் செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்று சிலப்பிதிகாரக்காப்பியம் எடுத்துக் காட்டினாலும் கண்ணகி ஆவேசம் கொண்டு, வழக்குரைத்து, நிதியை நிலைநாட்டி, சக்தி வடிவாகி, மதுரையை எரித்து மதுரை மாதெய்வத்தால் சினம் தணிந்து பின்னர் பதினான்காம் நாளில் தேவர்களின் உதவியால் தெய்வ வடிவத்தில் தனது கணவனுடன் நல்லுகத்திற்குச் செல்வதாக இளங்கோ வடிகளாரும் ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கிறார்.

“விதியின் தன்மை பழுதில் விழுந்த தன்றோ? என்று இராமனுக்கு ஆறுதல் கூறும் இலக்குவன் மேலும் தொடர்ந்து

“நின்று இனி நினைவது என்னே? நெருங்கி
                             அவ்வரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ வெய்யகொடுந்
                           துயர் குளிப்பது”

என்றும் உறுதி கூறி இறுதியில் அரக்கரை அழித்து சீதா தேவியை சிறைமீட்ட காவியத்தைக் கம்பன் விரிவுபட எடுத்துக்கூறியும் நம்பிக்கை ஊட்டுகிறார்.

நல்வினை தீவினை என்று கூறும் போது இங்கு வினை என்பதற்கு செயல் என்று பொருள் கொண்டு நல்ல செயல்களையே செய்ய வேண்டும் அதுவே இன்றோ நாளையோ நல்ல பலன்களை அளிக்கும். திய செயல்கள் கேடுகளை விளைவிக்கும் என்னும் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.