பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்துப் பாடல் காதையில்

18


சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெருநூலின் கடவுள் வாழ்த்துப்பாடலாக.

“உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகு இல் சோதியன் அம்பலத்துஆடுவான்

மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவோம்”

என்று தொடங்குகிறார்.

“ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலப்பொழில் தில்லையுள்

மாநடம் செய்வரதர் பொன்தாள் தொழ”

என்றும் தொடர்ந்து அடுத்து விநாயகப் பெருமானையும், அடியார் பெருமையயும் குறிப்பிட்டும் தனது பாயிரத்தில் பாடுகிறார்.

பாரதி தனது பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்திற்குக் கடவுள் வாழ்த்தாக பிரமஸ்துதி என்னும் தலைப்பில் :

“ஒமெனப் பெரியோர்கள்- என்றும்
ஓதுவதாய், வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பது வாய் - துயர்
தேய்ப்பதுவாய், நலம் வாய்ப்பதும் வாய்
நாமமும் உருவுமற்றே - மனம்
நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் - வெறும்

அறிவுடனாநந்தவியல் புடைத்தாய்”

என்று தொடங்கி மேலும் சரஸ்வதி வணக்கமும் பாடி

காவியத்தைத் தொடங்குகிறார்.