பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

19


இளங்கோவடிகள் தனது காப்பியத்தை மங்கல வாழ்த்துப் பாடல்களுடன் தொடங்குகிறார். அம்மங்கல வாழ்த்துப் பாடல்களில் திங்கள், ஞாயிறு, மாமழை பூம்புகார் ஆகியவை போற்றப்படுவது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

ஞாயிறும் திங்களும் உலகுக்கு ஒளி கொடுப்பன. மாமழை உலகனைத்திற்கும் உயிர் கொடுப்பன. சூரியனுடைய ஒளியும் மழையும் இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. இந்த இயற்க்கை சக்தியைப் போற்றி அடிகளார் தனது காப்பியத்தைத் தொடங்குகிறார்.

பூம்புகார் நாட்டை ஆளும் மன்னனின் நகரம். இவை இங்கு இடம் பெற்று போற்றப்படுகின்றன.

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், என்றும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்றும்,
மாமழை போற்றுதும் மாமழை போற்றதும் என்றும்,

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்”

என்றும் மங்கல வாழ்த்துப்பாடல்கள் தொடங்குகின்றன.

சதுர்வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்தில் இயற்கை சக்திகளைக் குறிக்கும் தேவர்களும் தேவதைகளும் இந்திரனும் அதிகமாகப் போற்றப்படுகின்றனர். அந்த வழியில் சிலப்பதிகாரக் காப்பியமும் திங்களையும், ஞாயிற்றையும் மழையையும் போற்றுகிறது. பூம்புகாரைப் போற்றுவது நாட்டுப்பற்றைக் குறிக்கிறது. நான்கு பாடல்களிலும் சோழனின் ஆணைச் சிறப்பைக் குறிப்பிடுவது ராஜபக்தியை சிறப்பித்துக் காட்டுவதாக உள்ளது.

கண்ணகியைக் குறிப்பிடும்போது திருமகளுக்கும் அருந்ததிக்கும் ஒப்பிட்டு.