பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கல வாழ்த்துப் பாடல் காதையில்

20


“போதிலார்திருவினாள் புகழுடைவடிவென்றும் தீதிலாவடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரர்தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள்பெயர் மன்னும்கண்ணகியென்பாள்”

என்று குறிப்பிடுகிறது. காப்பியம்

இந்த வரிகளுக்குத் தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய வடிவு இவள் வடிவையொக்கும் என்றும் குற்றமில்லாத அருந்ததியின் கற்பு இவள் கற்பையொக்கும் என்றும் உலகின் மாதரார் தன்னைத் தொழுதேத்தும்படி விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பவள் கண்ணகி என்னும் பெயருடையாள் என்று பொருளாகிறது. பெருங்குடி மகளிரை திருமகளுக்கும் தீதிலா அருந்ததிக்கும் ஒப்பிடுவது இந்து சமய மரபாகும்.