பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனையறம்படுத்தகாதையில்

24


 கோடலும் இழந்த என்னை" என்று இல்லற வாழ்வை இழந்த அவலத்தைக் காப்பியம் குறிப்பிடுகிறது.

இல்லறத்தின் கடமைகளையும் பெருமைகளையும் பற்றி வள்ளுவப் பெருமான் மிகச்சிறப்பாகக் கூறுகிறார்.

பிரம்மச்சாரிகள், வானப்பிரத்தர்கள், துறவிகள், பாதுகாப்பிலிருந்து கைவிடப்பட்டவர்கள், வறுமை உற்றவர்கள், துணையில்லாமல் தன்னிடம் வந்து இரந்தவர்கள், தனது முன்னோர், தெய்வம், விருந்தினர் சுற்றத்தார், தான் தனது குடும்பம் முதலியவர்களைக் காத்தலும் அவர்களுக்குத் துணையாக இருப்பதும் இல்லறத்தின் முக்கிய கடமைகளாக வள்ளுவர் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.