பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இந்திர விழவூரெடுத்த காதையில்

சிலப்பதிகாரக் காப்பியத்தில், இந்திர விழாவைப் பற்றி விவரிக்கும் இந்தக் காதை மிகவும் பிரபலமானதாகும். இந்திர விழாவைப் பற்றிய மிகவும் சிறப்பான செய்திகளையும், சிலப்பதிகாரக் கதையில் மிக முக்கியமான திருப்பதைப் பற்றிய செய்திகளையும் இக்காதை குறிப்பிடுவதால், கதையின் இப்பகுதி மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.

சிலப்பதிகாரக் காப்பிய காலத்தில் இந்திரவிழா மிகவும் பிரபலமாக நடைபெற்றிருக்கிறது. இவ்விழா சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் நடைபெற்றிருப்பதாக சிலப்பதிகாரக் கதை கூறுகிறது. இன்றைய நாளில் கூட சித்திரா பௌர்ணமி நாளில் தமிழகத்தில் பல ஊர்ளிலும் மக்கள் திரளாகக் கலந்து கொள்ளும் விழாக்கள் நடைபெறுகின்றன. மதுரையில் இன்றும் கூட வைகை ஆற்று மணலில் சித்திரை முழுநிலா நாளில் பல லட்சம் மக்கள் குதூகலமாகக் கூடுகின்றனர். வைகை நதிக் கரைகளில் உள்ள எல்லா ஊர்களிலும் இவ்விழாக்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள பல ஆற்றுப்படுகைகளிலும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலமாக நடைபெறுவதை இன்றும் காண்கிறோம்.

இவ்விழாக்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் குதூகல மாகக் கூடிக்களிக்கிறார்கள். எனினும் இக்காலத்தில் அவ்விழா இந்திரவிழா என்று அழைக்கப்படவில்லை. பொதுவாக மக்கள் அதை சித்திரைத் திருவிழா என்று இக்காலத்தில் பிரபலமாக அழைக்கிறார்கள்.

இருக்கு வேத காலத்தில் இந்திரன் முதன்மையான தெய்வங்களில் ஒன்றாக் கருதப்பட்டிருக்கிறது. தேவேந்திரன் என்றும் தேவகுலத்தின் அரசன் என்றும் புகழ் பெற்றிருந்தான். அதன் செல்வாக்கு அக்காலத்தில் மிக அதிகமாக இருந்திருப்பது தெரிய வருகிறது. எனவே இந்திரவிழாக் காட்சிகள் மிக விரிவாகக், காப்பியத்தின் இக்காதையில் விளக்கப்பட்டிருக்கிறது. இந்திர