பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. கடலாடு காதையில்

இக்காதையில் மாதவியின் ஆடல் திறன் பற்றிய விரிவான குறிப்புகள் வருகின்றன. பதினோரு வகையான பாணிகளில் மாதவி ஆடல்கள் நிகழ்த்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

“அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபில்
பதினோராடலும் பாட்டின் பகுதியும்

விதிமாண் கொள்கையின் விளங்கக்காணாய்”

என்று அடிகளார் குறிப்பிடுகிறார்.

இந்தப் பதினோரு ஆடலுள் இறைவன் ஆடிய இரண்டினை முன் வைத்தும் மாயோன் ஆடிய இரண்டினையும் முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின் பின் வைத்தும் வென்றி பற்றி நிகழ்ந்த இக்கூத்துகளின் பின், காமத்தால் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோன் ஆடிய வினோதக் கூத்தினையும், அதன் பின் அவன் மகனாகிய காமன் ஆண்மை திரிந்து பேடியுருக் கொண்டு ஆடிய கூத்தினையும் பின்னர் பெண் தெய்வங்களுள்ளே, மாயவளும் திருமகளும், அயிராணியும் ஆடியவற்றையும் வைத்தும் அவரவர் தகுதிக்கும் ஆண்மை பெண்மை கட்கும் கூத்துகளின் இயல்புகளுக்கும் பொருந்த முறைப்படுத்தியுள்ள இளங்கோவடி- களின் திப்பிய புலமை மாண்பு செப்பு தற்கரிய தொன்றாகும் என்று உரையாசிரியர் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மாதவியின் ஆடல்களின் பாணியைப் பற்றி சிலப்பதிகாரக் காப்பியம் கூறுவது

“மாயோன் பாணியும், வருண பூதர்
நால்வகை பாணியும், நலம் பெரும் கொள்கை,

வானூர் மதியமும் பாடிப்பின்னர்”