பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலாடு காதையில்

42


ஆகியவைகள் சிலப்பதிகாரக்காப்பியம் குறிப்பிடும் மாதவியின் ஆடல் பாணிகளாகும்.

இதில் இமையவள், உமையவள், அஞ்சனவண்ணன், சூர்த்திறம் கடந்தோன் (முருகன்) நீணிலம் அளந்தோன் (திருமால்) காமன், மாயவள், திருவின் செய்யோன் (திருமகள்), பாரதி, அயிராணி ஆகியோரெல்லாம் இந்து சமயம் வழிபடும் தெய்வ வடிவங்களாகும்.

இறைவனும் இமையவளும், நான்முகனும் பாரதியும், திருமாலும் (கண்ணன்) திருமகளும் முருகனும், காமனும் அயிராணியும் ஆடல் வடிவங்களில் நமக்குக் காட்சியளிப்பதைக் காண்கிறோம்.