பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. நாடுகாண் காதையில்

கோவலன், மாதவியைவிட்டு நீங்கி, தனது இல்லம் வந்து கண்ணகியுடன் அதிகாலையில் விடியா முன்னரே புகார் நகரை விட்டு நீங்கி மதுரைக்குப் பயணமானார்கள்.

“வான்கண் விழியாவைகரையமந்து
மின்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாட்கங்குல்

ஊழ்வினைக் கடைஇ உள்ளத்துரப்ப”

வைகரையாமத்திலேயேமிக அதிகாலையிலேயே இருட்டுள்ள போதே ஊழ்வினை வழிகாட்ட ஊரைவிட்டுச் சென்றார்கள். புகார் நகரின் எல்லையக் கடந்தவுடன்

“நீ ணெடு வாயில் நெடுக்கடை கழிந்தாங்கு
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த

மணிவண்ணன் கோட்டம் வலஞ் செயலாக்கழிந்து”

என்று அடிகளார் குறிப்பிடுகிறார்.

பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொண்டுள்ள மணிவண்ணனாகிய திருமாலின் கோயில் வலம் வந்து அங்கிருந்து போயினர் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் மேற்கு நோக்கிச் செல்லும்போது செழிப்பு மிக்க பல ஊர்களையும் கடந்து செல்கிறார்கள் வழியில்

மழைக் கருவுயிர்க்கும் அழற்றி கழட்டில்
மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை

இறையுயர் மாடமெங்கணும் போர்த்து