பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

49


புண்ணிய சரவணம் பொருந்து விராயின்
விண்ணவர் கோமான் விழுநூலெய்துவிர்
பவகாரணி படிந்தாடுவீராயிற்
பவகாரணத்திற் பழம் பிறப்பெய்துவிர்
இட்ட சித்தி எய்து விராயின்

இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்குப் பிலம்புக வேண்டுதிராயின்
ஓங்குயிர் மலையத்துயர்ந்தோற்றொழுது
சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ்செய்தால்,
நிலம்பக வீழ்ந்த சிலம் பாற்ற கன்றலைப்
பொலங்கொடி மின்னிற் புயலைங்கூந்தற்
கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்துத்
தொடி வளைத் தோளி ஒருத்தி தோன்றி
இம்மைக் கின்பமும்மறுமைக் கின்பமும்
இம்மையும் மறுமையும் இரண்டுமின்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன்வரோத்தமை என்பேன்,
உரைத்தார்க்குரியேன் உரைத்தீராயின்,
திருத்தக்கீர்க்குத் திறந்தேன்கதவெனும்,
கதவந்திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடைகழியன,
ஓட்டுப் புதவமொன்று ண்டதனும்பர்
வட்டிகைப் பூங்கொடிவந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங்குறைத்தால்
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும்,
உரையீராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழிப்புறத்து நீக்குவல் நும்மெனும்
உரைத்தால் உளரெனின்உரைத்த மூன்றின்
கரைப் படுத்தாங்குக் காட்டினன் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்