பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காடுகாண் காதையில்

50


ஒரு முறையாக உளங்ககொண்ட டோதி
வேண்டிய தொன்றின் விரும்பினீராடிற்
காண்டகுமாபினவல்லமற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்,
பொற்றாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின்,

உள்ளம் பொருந்து விராயின் மற்றவன்
புள்ளணி நீள் கொடி புணர் நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணை மலர்த்தாளிணை,
ஏன்று துயர்கெடுக்கம் இன்பம் எய்தி

மாண்புடை மரபின் மதுரைக்கேகு மின்”

என்று சிலப்பதிகாரக் காப்பிய வரிகள் கூறுகின்றன.

ஒரு அந்தணர் வாயிலாக திருமாலிருஞ்சோலையின் சிறப்பினையும் அங்கு அக்காலத்தில் இருந்த மக்களின் பழக்கத்தில் இருந்த இந்து சமய வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், புண்ணிய தீர்த்தங்கள் அவைகளின் பயன்கள், பலன்கள், ஆகியவற்றை இளங்கோவடிகளார் சிறப்பித்துக் கூறுவதைக் காண்கிறோம்.

கணிகையர் வாழ்க்கை மிகவும் இழிவானது, பிணியைப் போன்றது. மேலோரும் நூலோரும் நன்மை தீமைகளை நன்கு அறிந்தோரும் அத்தகைய வாழ்க்கையை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்னும் நன்னெறியை அடிகளார் கீழ்க்கண்ட காப்பிய வரிகளில்

“மேலோராயினும் நூலோராயினும்
பால்வகை தெரிந்த பகுதி யோராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட்டொழியும்

கணிகையர் வாழ்க்கை கடையே போன்மென்”

என்று குறிப்பிட்டுக் கூறுகிறார்.