பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேட்டுவரிக்காதையில்

54



ஆங்குக்

"கொன்றையும் துளவமும் குழுமத்தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள் மேலிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க்காடிய

குமரிக் கோலத்துக் கூத்துள்படுமே"

என இளங்கோவடிகளாரின் பெரும் காப்பிய வரிகள் மிக அழகாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

இவ்வாறு அசுரர் வாடத் தேவர்களுக்கு வெற்றி கிடைக்க மரக்கால் கூத்து ஆடிய கொற்றவையை வணங்கித் தொழுது வேட்டுவர்கள் ஆடிப்பாடியாத அக்கால வழக்கத்தின்படி ஆடிப்பாடியதை அடிகளார் தனிச்சிறப்பாக இக்காதையில் கூறுகிறார்.

"சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர் கெட அருளும் நின் இணையடி தொழுதேம்"

எனவும்,

"வம்பலர் பல்கிவழியும் வளம்பட,
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச்

செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்"

என்றும்,

"விண்ணோர் அமுதுண்டுஞ்சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டடிருந்தருள் செய்குவாய்"

என்றும்

"மருதின் நடந்து நின்மாமன் செய்வஞச

உருளும் உதைத்தருள் செய்குவாய்"

என்றெல்லாம் ஆடிப்பாடி

"மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர், பொதியிற் பொருப்பன பிறர் நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட

வெட்சி சூடுக விறல் வெய்யோனே"