பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

55


என்று, வேதங்களை அருளிச் செய்த முழு முதல் கடவுளாகிய சிவபெருமானுக்குப் பின் னோனாகிய அகத்தியன் எழுந்தருளியுள்ள பொறை நிறைந்த உயர்ந்த பொதிகை மலைக்கும் உடையவனான பாண்டி மன்னன், பகைவரின் முனையிடமும் அவர் நின்ற மீட்கும் தொழிலும் பாழ்பட விரும்பும் அம்மன்னன் வெற்றி மாலை சூடுவானாக என்று இக்காதையை இந்து சமய மணத்துடன் முடிக்கிறார் அடிகளார்.

கொற்றவை பற்றி கூறப்படும் அத்தனை எடுத்துக்காட்டுகளும் அடைமொழிகளும் சான்றுகளும் இந்து சமயச் சார்பானவைகளும் அக்கால மக்கள் சமுதாயத்தின் சமயப்பழக்க வழக்கங்களுக்குட்பட்டதாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். இளங்கோவடிகள் மிகவும் நுட்பமாக நாட்டு மக்களிடையில் நிலவியிருந்த பல வேறு சமயப் பழக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும், கோவில்களையும் விழாக்களையும் காப்பியத்தில் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.