பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

63


"அறந்தருநெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கோவலன் மதுரை நகரைச் சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்பி வந்து மாதவத்தாட்டியான கவுந்தியடிகளிடம் நகரின் சிறப்புகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தபோது ஏற்கனவே கோவலனுக்கு அறிமுகமாகி யிருந்த மாடலன் என்னும் மறையோன் அங்கு வந்து சேர்ந்தார்.

அம்மறையோனை அடிவணங்கி செய்தி கேட்டது பற்றி:

"தாழ்நீர் வேலித்தலைச் செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலை வலங்கொண்டு
குமரியம் பெருந்துறைக் கொள்கையின் படிந்து

தமர் முதற் பெயர்வோன் தாழ் பொழிலாங்கண்,
வருந்து செல்வருத்தத்து வான்றுயர் நீங்கக்
கவுந்தி இடவறின் புகுந்தோன் தன்னைக்

கோவலன் சென்று சேவடி வணங்க"

என்று காப்பிய வரிகள் குறிப்பிட்டுக் கூறுகின்றன. இந்து சமயத்தின் மூலவேர் நான் மறைகளாகும். அவைகளின் கொள்கைகள் மக்களுக்கு நலம் பயப்பனவாகும். அதை "நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை" என்று காப்பியம் குறிப்பிடுவது சிறப்பாகும். இந்து சமய வழிபாடுகளில், வழிபாட்டு முறைகளில் மலைவலம் வருவதும் புண்ணிய தீர்ததங்களில் நீராடுவதும் அடங்கும். அவை மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் பயப்பனவாகும். அதை இவ்வரிகளில் "மாதவ முனிவன் மலை வலம் கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற்படிந்து" மாமறை முதல்வன் மாடலன்