பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்களக்காதையில்

70


இல்லறத்தின் சிறப்புகளைப் பற்றியும் கடமைகளைப் பற்றியும் மிக விரிவாகக் கூறுகிறார். பொருளீட்டுதல் குழந்தைகளைப் பராமரித்தல் அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தல், முதியோர்களைப் பராமறித்தல், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தல் முதலிய அறங்கள் சிறப்புற எடுத்துக்காட்டப்படுகின்றன.

மாதரியின் இல்லத்தில் தங்கியிருந்த நாளில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் சிறந்த பல நல்ல கருத்துக்கள் நிறைந்தனவாக அமைந்துள்ளதைக் காண்கிறோம்.

கண்ணகி கோவலனுடன் மதுரைக்குப் புறப்பட்டபோது அவளுடைய சுற்றத்தாரையும், வேலைக்காரர்களையும் விட்டு விலக்கி, "நாணமும் மடனும், நல்லோரின் வாழ்த்துக்களையும், பாதுகாத்துப் பேணிய கற்பினையும் மட்டும்" துணையாகக் கொண்டு தன்னுடன் வந்ததாகக் கோவலன் கூறுகிறான்.

"குடிமுதல் சுற்றமும் குற்றிளையோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணையாக

என்னோடு போந்து ..........."

என்று கோவலன் வாயிலாகக் காப்பியவரிகள் குறிப்பிடுவது பெண்ணின் பெருமையைப் பற்றியதாகும்.

இராமன் வனம் சென்றபோது, அயோத்தியைக் கடந்தவுடன் சுமந்திரனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு தனது தம்பியுடனும் ஜானகியுடனும் காட்டுக்ப் புறப்பட்டதைக் கம்பன் தனது கவிதையில்

"தையல் தன் கற்பும், தன்தகவும் தம்பியும்

மையறு கருணையும், உணர்வும் வாய்மையும்