பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

71



செய்யதன் வில்லுமே சேமம் ஆகக்கொண்டு

ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே"

என்று மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

இங்கு இளங்கோவடிகளும் கம்பனும் நம்மை ஒரு இடத்தில் நிறுத்துகிறார்கள். கண்ணகியின் கற்பின் பெருமையும் சீதையின் கற்பின் சிறப்பும் இருவரின் இதர சீலங்களும் நம்முன் நிற்கின்றன.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் கொலைக் களக்காதை அவலத்தின் உச்சமாகும். அக்காதை வரிகளின் முடிவாக வரும் வெண்பா மூலம் இளங்கோவடிகள் உலகோர்க்கு ஒரு அறிவுரை கூறுகிறார்.

உரையாசிரியர் உயர்திரு பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கண்டவாறு தனது உரையில் கூறிகிறார்.

"பாண்டியன் முன் செய்த தீங்கின் பயனாகி வந்த தீவினையால் இவ்வுலகத்தில் வளையாத அவனுடைய செங்கோல் கண்ணகியின் கணவனாகிய கோவலன் முன்னிலையாக வளைவுற்றது. ஆகலான் நீவிர் செய்த இரு வினைப்பயனும் உம்மை வந்து பொருந்தும் என்பதனை அறிந்து உலகத்தீர் நல்வினையைச் செய்யுங்கள்".

"நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை

விளைவாகி வந்த வினை"

என்பது இக்காதையின் முடிவில்வரும் வெண்பாவாகும்.