பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

77



ஆடைகளையும் வளையல்களையும் இழந்து நாணத்தால் தனது கைகளால் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளும் தையலின் முகத்தின் அழகைப் பாடுவோமா அல்லது கைகளால் மறைத்து அவனது முக அழகுகண்டு மையலுற்றவனுடைய வடிவழைகப் புகழ்ந்து பாடுவோமா? என்றும் ஆயர்பாடிப் பெண்கள் கும்மியடித்துப் பாடுவதை மிக அழகாக இளங்கோவடிகளார் மனம் உருகக் கூறுகிறார்.

இன்னும்

"கதிர்திகிரியான் மறைத்த
கடல் வண்ணன் இடத்துளாள்
மதிபுரையும் நறு மேனித்
தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தல்
பிஞ்ஞை சீர் புறங்காப்பார்
முதுமறை தேர் நாரதனார்

முந்தை முறை நரம்புளர்வார்"

ஞாயிற்றை தனது சக்கரத்தல் மறைத்த கடல் வண்ணனான கண்ணனுடைய இடப்பக்கத்திலும் நிலவைப் போன்ற வெண்மை நிறத்தையுடைய பல தேவனுக்கு வலப்புறத்திலும் நிற்கிறாள் நப்பின்னைப் பிராட்டி அப்போது தாளம் தவறாது வேதம் அறிந்த நாரதனார் இசை எழுப்பினார் என்றும்,

"மயில் எருத்து உறழ்மேனி
மாயவன் வலத்துளாள்
பயில் இதழ் மலர் மேனித்
தம்முனோன் இடத்துளாள்
கயில் எருத்தம் கோட்டிய நம்
பின்னை சீர்புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை

புணர்நீர் நரம்புளர்வார்"