பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்ச்சியர் குரவைக் காதையில்

82


முன்னிலைப் பரவலாக

1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொரு நாள்
        கடல் வயிறு கலக் கினையே
கலக்கியகை அசோதையார் கடை
        கயிற்றால்கட்டுண்ட கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே!

2.
அறுபொருள் இவனென்றே
        அமரர்கணம் தொழுதேத்த
உறுபசி யொன்றின்றியே
        உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான்
        உறிவெண்ணெய் உண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ
        மருட்கைத்தே.

3.
திரண்ட மரர் தொழுதேத்தும்
        திருமால் நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும்
        இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத்
        தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ

        மருட்கைத்தே!

இப்பாடல்களில் திருமாலின் கைகளின் சிறப்புகளையும் வாயின் மகிமையையும், திருவடிகளின் பெருமைகளையும் ஆயர்குல மக்கள் சிறப்பித்துக் பாடுவதைக் காண்கிறோம்.

கடலைப் போன்ற கரிய நிறத்தையுடைய கண்ணபெருமானே, நீ அன்று வடமேறு மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலின் நடுவயிரைக் கலக்கினாயே, அவ்வாறு கலக்கின. அந்தக் கைகள் அசோதைப் பிராட்டியின் கடைக்கயிற்றால் கட்டுண்டகைகள் தானே. தாமரை மலரின் உந்தியை உடையவனே, இது என்ன மாயமோ வியப்பாக இருக்கிறதே. என்றும்