பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

83


முழு முதற்பொருள் இவனே என்று அமரர் கூட்டம் எல்லாம் யன்னைத் தொழுது போற்றுகிறார்கள். நீயோ மிக்க பசியொன்றும் இல்லாமலேயே அனைத்து உலகங்களையும் உண்டாய். அவ்வாறு உலகை உண்ட வாயானது, உறியிலிருந்து களவாடி வெண்ணை உண்ட வாயல்லவா? வளமான துளசி மாலையை மடையவனே இதென்ன மாயமோ, வியப்பாக உள்ளதே!

என்றும்,

அமரர் எல்லாம் திரண்டு ஒன்று கூடி வணங்கிப் போற்றும் திருமாலே, உனது தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்களின் இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் இருள் தீர அளந்தாயே, அந்தத் திருவடிகள்தானே பாண்டவர் ஐவருக்கு தாதாக நடந்த திருவடிகள் என்ன மாயமோ வியப்பாக இருக்கிறதே என்றும் அதன் பொருளாகும்.

“அறியாதார்க் கானாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தான் காணோடி

உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்த பொன் வயிற்றுக்கு எறிநீருலகனைத்து மெய்தாதால், சாழலே

என்று திருமாலின் பொன் வயிற்றைப் பற்றியும்,

“வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக்குறுங் கயிற்றால் கட்டுண்டானாகிலும்

எண்ணற்கரியன் இமை யோர்க்கும் சாழலே

என்று திருமாலின் கட்டுண்ட கைகளைப் பற்றியும்

“கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்

ஓத நீர் வையகம் முன் உண்டுமிழ்ந்தான் சாழலே”