பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சோழ நாட்டில் பிறந்த பராசரன் என்னும் அந்தனர், சேரநாடு சென்று, வேத பாராயனத்தில் மற்றவர்களை வென்று, பார்ப்பன வாகை சூடிப் பரிசுகள் பல பெற்றுப் பாண்டிய நாட்டில் உள்ள திருத்தண்கால் என்னும் ஊருக்கு வருகிறார். அங்குத் தமக்கு ஈடாக வேதம் ஒதிய தக்கினாமூர்த்தி என்னும் அந்தனச் சிறுவனைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, அச்சிறுவனுக்குத் தாம் பெற்ற பரிசுப் பொருள்களைக் கொடுக்க, அச்சிறுவன் அப்பரிசுப் பொருள்களிலிருந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு தெருவில் உலவ, அவனிடம் உள்ள அந்த ஆபரணங்கள் புதையல் பொருள்கள் எனச் சந்தேகப்பட்டு, அரசின் காவலர்கள், அரசிற்குச் சேர வேண்டிய புதையல் பொருள்களை இந்தப் பிராமனச்சிறுவன் அபகரித்து விட்டான்' என்று கருதி அவனைச் சிறையிலிட, இந்த அநீதியைக் கண்டு அச்சிறுவனின் தாய் மதுரையில் இருந்த கொற்றவை கோவிலில் முறையிட, அக் கொற்றவை கோவிலின் கதவுகள் திறவாது மூடிக்கொள்ள, இச் செய்திகளைத் தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த பாண்டிய மன்னன் அந்த அந்தனச் சிறுவனுடைய பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்டு, அவர்களுடைய அந்த ஆபரணப் பொருள்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, அவர்களுக்கு மேலும் ஒர் ஊரைத் தானம் கொடுத்து, கடமை தவறிய பணியாளர்களால் தனது ஆட்சியில் தவறு நேர்ந்து விட்டதற்கு வருந்தக் கொற்றவை கோயிலின் கதவுகள் பேரொலியுடன் திறந்தன.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகப் பாண்டிய மன்னன், “சிறைக்கோட்டங்களைத் திறந்துவிட்டு, இறை பொருள் கொடுக்காதவர்களையும் விடுதலை செய்து, இடுபொருளாயினும் (பிறர் கொடுத்த பரிசுப் பொருள்களானாலும்) படுபொருளாயினும் (புதையல் மூலம் கிடைத்த பொருள்களானாலும்) அவை உற்றவர்க்கே உரிமையாகும்” என அறிவித்தான் என்று மதுரை மாதேவி கண்ணகியிடம் கூறுகிறாள்.