பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 109

சூரியன் எத்தனைதான் தனது கொடுங்கதிரால் கட்.ெ பித்தாலும், அச்சூரிய ஒளி பட்டுத்தான் தாமரை மலர் பலம்வதைப் போல என்னும் பொருளில், "செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லால் அலரா" என்று ஆழ்வார்

குறிப்பிடுகிறார்.

எத்தனை வறட்சிகள் ஏற்பட்டுப் பயிர்கள் வட்டமடைந்தாலும் கடைசியில் அம்மழையை நம்பியே

காத்திருக்கும் பயிர்களைப்போல என்னும் பொருளில் "எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவை போல்" என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

எத்தனை துரம் சுற்றி ஓடினாலும் ஆறுகள் கடைசியில் க. லையே போய்ச் சேர்கின்றன என்னும் கருத்தில் "தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடித் தொடுகடலே புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்" என்று

ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

உள்ளத்தை உருக்கும் இப்பாசுரங்களில், தாயை நோக்கிச் செல்லும் குழந்தை, காதலனை நோக்கி நிற்கும் குலமகள், அரசனை நோக்கி நிற்கும் குடிமக்கள், மருத்துவனை நோக்கிச் செல்லும் நோயாளி, பாய்மரத்தை நோக்கிச் செல்லும் பறவை, சூரிய ஒளியைக் கண்டவுடன் மலரும் தாமரை மலர், மழையை எதிர்நோக்கும் பயிர், கடலை நோக்கிச் செல்லும் ஆறுகள் போல வித்துவக்கோட்டம்மானை நோக்கித் தாம் செல்வதாக ஆழ்வார் மிக அருமையாகப் பாடுகிறார். இப்பாசுரங்களில் குலசேகராழ்வார் சிறந்த சமுதாயக் கருத்துகளை, சிறந்த ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட உவமைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகில் பல வகையான சாதாரண மக்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள். அத்தகைய மக்களை நாம் எல்லா நாடுகளிலும் காணமுடிகிறது. அவ்வாறான பல கோடிக்கணக்கான மக்கள் பெரும்பாலும் சமுதாயத்திற்குத்