பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 123 "வினையால் அடர்ப்படார், வெந்நரகில் சேரார்,

தினையேனும் தீக்கதிக்கட் செல்லார் - நினைதற் கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட் கரியானைக் கைதொழு தக்கால்”

தீவினைகளால் தொல்லைகள் படமாட்டோம், நாகத்தில் விழமாட்டோம், தினையளவும் தீய வழிகளில் செல்ல மாட்டோம் என்றெல்லாம் ஆழ்வார் தமது பக்திப்

ல்மூலம் மக்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறுகிறார். "காலை யெழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த

மேலைத் தலைமறையோர் வேட்பனவும் - வேலைக்கண்

ஒராழி யான்அடியே, ஒதுவதும் ஒர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர்"

என்று ட ாடுகிறார். இன்னும்,

"பெயரும் கருங்கடலே நோக்கும்.ஆறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும் - உயிரும் தருமனையே நோக்கும்.ஒண் டாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு"

கருங்கடலை நோக்கியே ஒடுகிறது, ஆறு. கதிரவனின் ஒளியை நோக்கிப் பூக்கள் மலர்கின்றன. அதுபோல, உயிர் தர்மத்தை நோக்கிச் செல்கிறது. உணர்வு திருமாலை மட்டுமே நோக்கிச் செல்கிறது என்று சிறந்த உவமைகளோடு ஆழ்வார் குறிப்பிடுகிறார். இதே போன்ற சிறந்த உவமைகளைக் குலசேகராழ்வார் பாடல்களிலும் பார்த்தோம்.

"நன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி

நின்று நிலமுழுதும் ஆண்டாலும் - என்றும் விடல்ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடல்ஆழி கொண்டான்மாட் டன்பு"

என்று, பிணிமூப்பு ஆகியவை இன்றி ஊழிக் காலம் உலகத்தை ஆள்வதற்கு எனக்கு வாய்ப்பு ஏற்பட்டாலும் நான் அதை விரும்பேன்; திருமால் பால் உள்ள அன்பை விடமாட்டேன் என்று பக்திச் சுவைமிகுந்து ஆழ்வார் பாடுகிறார். -