பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 'சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருவிழாக்களுக்கு வித்திட்டனர். இன்னும் ஆண்டவனுக்கே பல்லாண்டு பாடிய பெருமை நமது பெரியாழ்வாருக்குண்டு. ஆண்டவனை வழிபடும் மையங்களாகக் கோவில் களையும் குளங்களையும் கட்டி, வளர்த்து, வளப்படுத்தி, பெருந்திரளாக மக்கள் கூடும் பெரும் விழாக்களை வகுத்து, கல்வியும் ஞானமும் செயல்திறனும் கலைத்திறனும் மிக்கவர்களாக நாட்டு மக்களை உலக மக்களை உருவாக்கவும் ஆழ்வார்களும் ஆச்சாரியார்களும் சிந்தித்திருக்கிறார்கள். தங்களது சிறந்த அறிவுரைகளைத் தங்களது இனிய பாடல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

உலக மக்கள் அனைவரும் நன்னெறியில் நேர்நெறியில் உயர் நெறியில் செல்ல ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள், வழிகாட்டியிருக்கிறார்கள்.

வெள்ளமும் பறவைகளும் விலங்குகளும் வேசையர் உள்ளமும் ஒரு வழியில் நேர்வழியில் சென்றன தசரதனுடைய நல்லாட்சியில் என்று கம்ப நாட்டாழ்வார் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். -

"வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்

உள்ளமும் ஒருவழி ஒட நின்றவன் தள்ளரும் பெரும்புகழ்த் தயர தப்பெயர் வள்ளல் வள்உறை அயில்மன்னர் மன்னனே !” என்பது அவருடைய அற்புதமான பாடல் அடிகளாகும்.

ஆழ்வார்கள் தங்கள் அருளாட்சிமூலம் உலகம் முழுவதையும் ஒருவழிப்படுத்த, உயர்வழிப்படுத்தத் தெய்வத் தொண்டு செய்துள்ளதை அவர்களுடைய திவ்யமான பாசுரங்களில் காண்கிறோம். உலகம் வாழ, உலகம் உய்ய, உலகிலுள்ள அனைத்து உயிர்ப்பொருள்களும் உய்ய மனித குலம் உய்ய ஆழ்வார்கள் பாடி மகிழ்ந்தார்கள்.

"நன்றுந் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்

ஒன்றும் குறையில்லை ஒதினோம்” என்று தொடங்கி,