பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 135

என்றும், பால்வளம் பெருகும் என்றும் ஆயர்பாடி பக... மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கே. தை நாச்சியாரின் பாவைப் பாசுரங்களும் .ெ ப்பதிகாரக் காப்பியத்தின் ஆய்ச்சியர் குரவைப் ல்களும் நமது நாட்டுப் பெண்களின் பக்திச் சிறப்பையும் தெய்வ வழிபாட்டுடன் இணைந்த கூட்டான ஆடல் பாடல் இசை நடனம் மற்றும் இதர விழாக்களில் உள்ள ா (, lாடுகளையும் காட்டுகின்றன.

திருமாலின் உள்ளத்தில் உறைபவள், திருமகள். அதனால் திருமாலைத் திருஉறை மார்பன் என்றும், திருஅமர் ாப்பன் என்றும் வழங்குகிறோம். ஆழ்வார்கள் பல இ |ங்களிலும் தங்கள் பாசுரங்களில் அவ்வாறு குறிப்பிடுவதைக் காணலாம்.

'வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்று பெரியாழ்வார் பாடுகிறார். "செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்பன் என்கோ?” . என்று நம்மாழ்வார் பாடுகிறார். “திருவாழ் மார்பன் தன்னைத் திசைமண் நீரெரி முதலா, உருவாய் நின்றவனை” என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

நமது வீடுதோறும் திருமகள் - இலக்குமி - வாழ்வதை விரும்புகிறோம்; லட்சுமி கடாட்சம் பெற வேண்டும் என்று விழைகிறோம். பெண் மக்களாகிய நமது தாயை, சகோதரிகளை நாம் இலக்குமியாகக் கருதி அழைக்கிறோம். திருமகளின் வடிவம் உலகளாவிய அழகிய வடிவமாகும். நாம் நமது பெண்களை இலக்குமிக்கு ஒப்பிடுவது நமது மரபாகும். அந்த வழியில் இளங்கோவடிகள் கண்ணகியைப்பற்றிக் குறிப்பிடும் போது செந்தாமரை மலரில் உறையும் திருமகளின் புகழுடைய வடிவைப் போன்ற வடிவழகைக் கொண்டவள் என்பதைப் போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்" என்று குறிப்பிடுகிறார். - அது போலத் திருமணத்திற்குப் பின்னர்க் கோவலன், கண்ணகியைப் பாராட்டும்ப்ோது அவளைத் திருமகளுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பேசுகிறான்.