பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 13

நகரம் சென்றதையும், அங்கிருந்து கணவனை இழந்த கண்ணகி ஆழ்ந்த துயரத்துடன் சேரநாட்டை அடைந்து, அங்கு தெய்வநிலை பெற்று வானுலகு அடைந்ததைப் பற்றியெல்லாம் இளங்கோவடிகள் மிக விரிவாக விவரிப்பதைச் சிலப்பதிகாரத்தில் படிக்கிறோம்.

இந்தத் தெய்விகக் கதைகள் மூலம் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், தமிழ்நாட்டின் ஒற்றுமையையும், அந்நாடுகளின் சிறப்பையும், கம்பனும் இளங்கோ அடிகளும் மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் அவையிலும், அவர்களுடைய நகரங்களிலும் இருந்த பல வேற்று நாட்டு அரசர்களைப்பற்றியும், வேற்று நாட்டு மக்களைப்பற்றியும், சேரன் செங்குட்டுவன் தன் படையுடன் இமயம்வரை சென்று திரும்பியதுபற்றியும், அப்பயணத்தில் அவன் சந்தித்த அரசர்கள்பற்றியும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் மூலம் அறிகிறோம். இன்னும், சேரன் செங்குட்டுவன் வடநாட்டு அரசர்களுடன் நடத்திய போரை முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நடந்த போருக்கும், இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போருக்கும், கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மகாபாரதப் போருக்கும் ஒப்பிட்டு, பதினெட்டு ஆண்டுகளும், பதினெட்டு மாதங்களும், பதினெட்டு நாள்களும் நடந்ததுபற்றியும், சேரன் செங்குட்டுவன் நடத்திய போர் பதினெட்டு நாழிகைகளில் நடந்து முடிந்ததாகக் காப்பியத்தில் செய்திகளைக் காண்கிறோம். மகாபாரதப் போரில் கலந்துகொண்ட போர் வீரர்களுக்குத் தமிழ் மன்னர்கள், ஒருபட்சம் காட்டாமல் அனைவருக்கும் உணவளித்ததாகவும் சிலப்பதிகாரச் செய்தி கூறுகிறது.

ஒவ்வொரு நாட்டு மன்னனுக்கும் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது அக்கால மன்னர்களின் பொதுவான சிந்தனை வழியாக இருந்தது. குறுநில மன்னர்கள் சிறுநில மன்னர்களாகத் தங்கள் எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளவும், சிறுநில