பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாடுகளும் திருவிழாக்களும், திருமால் அவதாரச் சிறப்புச் செய்திகளும் இராமாயணம், மகாபாரதக் கதைகளும் பரவியிருந்தன.

174 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் பல்லவ மன்னர்களும் பின்னர் பிற்காலச் சோழ மன்னர்களும் விஜய நகர மன்னர்களும் மற்றும் பல குறுநில மன்னர்களும் சிறுநில மன்னர்களும் பல திருமால் கோயில்கள் கட்டுவதற்கும், விரிவு படுத்துவதற்கும் புதுப்பிப்பதற்கும் பல திருப்பணிகள் செய்துள்ளார்கள். அத்துடன் ஆழ்வார்களும், வைணவ ஆச்சாரியார்களும், ஜீயர்களும் வேறு பல திருமா லடியார்களும், மேலும் பல பிரமுகர்களும் ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும் பொதுமக்களும் திருமால் திருக்கோயில் திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றியும், திருமால் வழிபாடுகளைப் பரப்பியும், நிலை நிறுத்தியும், மேம்படுத்தியும் வளர்த்தும் பெருமாள் சேவை செய்திருக்கிறார்கள்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட திருமால் திருக் கோயில்கள், திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் தவிர, மேலும் பல சிறிய பெரிய பெருமாள் கோயில்களும் தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் இருப்பதைக் காண்கிறோம். இருப்பினும், ஆழ்வார்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ள ஆலயங்களும் திருமால் வழிபாடுகளும் திருவிழாக்களும் தனிச்சிறப்பு மிக்கவை. o

ஆழ்வார்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடனும், தத்துவ ஞானச் சிறப்புடனும் தமிழ்ச்சுவையுடனும் திருமால் வழிபாட்டைச் செய்தார்கள். அதை ஒரு வாழ்க்கை நெறிமுறையாகப் பரப்பி நிலைநிறுத்தி வளர்த்தார்கள். அத்துடன் அவர்கள் திருமால் வழிபாட்டை உலக இயற்கையுடன் இணைத்து ஒரு மேலான தத்துவ நிலைக்கு உயர்த்தினார்கள். நாராயண மந்திரத்தை மக்கள் மனத்தில் நிலைநிறுத்தி வளர்த்தார்கள்.

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டுப் பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கவையாகும் சாத்துமுறைக்கான காப்புச் செய்யுள்களாக அனைவராலும் பாடப்படும் பாடல்களாகும்.