பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 183

வெள்ளென்று எருமைச் சிறுவீடு மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின் றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்” என்றும், “கோதுகல முடைய பாவாய் எழுந்திராய்” என்றும், "மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய், மாமீர்! அவளை எழுப்பீரோ” என்று பாடி ஆழ்ந்த துரக்கத்தில் இருந்த தோழியரை எழுப்புகிறாள். "சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட, நீ ஏன் இன்னும் உறங்குகிறாய்” என்று தோழியரை எழுப்புகிறாள். "எல்லே, இளங்கிளியே இன்னம் உறங்குதியோ” என்று தன் தோழிமாரை எழுப்புவதாக நாட்டு மக்கள் அனைவரையும் எழுப்பி, திருமால் வழிபாட்டிற்கு - கண்ணன் வழிபாட்டிற்கு - மக்களைத் திரட்டுவதை இப்பாடல்களின் உட்கருத்தாகக் காண்கிறோம்.

ஆழ்வார்களின் பக்தி இயக்கம் மக்களியக்கமாகத் திரட்டப்படுகிறது. இனி, துரங்கிக்கொண்டிருக்கும் திருமாலையும் எழுப்பி, கண்ணனை எழுப்பு மாறு நப்பின்னைப் பிராட்டியிடமும் கூறி, போற்றிப் புகழ்ந்து வந்தோம் எழுந்திராய் என்று கண்ணனை அழைத்து உலகில் உள்ள அனைவரும் திருத்தக்க செல்வமும் சேவகமும் கிடைக்கப்பெற்று வருத்தமும் தீர்ந்து மகிழ்வெய்தப் பறை தருவாய் என்றும் "செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன் லைம் என்று ஆண்டாள் பாடுகிறார். சிற்றில் விளையாட்டு

ஆற்றுப்படுகை, கடற்கரை முதலிய மணல் நிறைந்த பகுதிகளில் மனலில் வீடுகள் கட்டி விளையாடுவது நமது நாட்டுக் குழந்தைகளின் விளையாட்டுகளுள் ஒன்றாகும். அதையே சிற்றில் என இலக்கியங்களில் குறிப்பிடுகிறோம். சில சிறுவர் சிறுமியர் அவ்வாறு ஈரமணலில் சிற்றில் கட்டி விளையாடுவதை, விளையாட்டுப் பிள்ளைகளுள் வலுவுள்ள ஒருவன் சிதைப்பதும் அந்த விளையாட்டின் ஒரு பகுதியாகும் ஆயர்பாடியில் உள்ள சிறுமியர்கள் கட்டும் சிற்றில்களைச்