பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

போதரே யென்று சொல்லிப்

புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்த

அழகனுார் அரங்க மன்றே" ான்றும் மனம் கசிந்து பாடுகிறார்.

"ஊரிலேன் காணி யில்லை, -

உறவுமற் றொருவரில்லை, பாரில்நின் பாத மூலம்

பற்றிலேன் பரம மூர்த்தி, காரொளி வண்ன னேஎன்

கண்ணனே கதறு கின்றேன் ஆருளர் களைக ணம்மா !

அரங்கமா நகரு ளானே.” என்றும், -

“மனத்திலோர் துய்மை யில்லை,

வாயிலோர் இன்சொ லில்லை, சினத்தினால் செற்றம் நோக்கித்

தீவிளி விளிவன் வாளா -- புனத்துழாய் மாலை யானே,

பொன்னிசூழ் திருவ ரங்கா, எனக்கினிக் கதியென் சொல்லாயப்

என்னையா ளுடைய கோவே !”

என்றும் பரவசத்துடன் பாடுகிறார். "பழுதிலா ஒழுக லாற்றுப்

பலசதுப் பேதி மார்கள் இழிகுலத் தவர்க ளேனும்

எம்மடி யார்க ளாகில், தொழுமினிர், கொடுமின் கொள்மின் - என்றுநின் னோடு மொக்க, வழிபட அருளி னாய்போன்ம்

மதிள்திரு வரங்கத் தானே" என்றும்,

"அமரவோ ரங்க மாறும்,

வேதமோர் நான்கு மோதி தமர்களில் தலைவ ராய

சாதியந் தணர்க ளேனும்